தளத்திற்கு வந்திருக்கும் அரிமா சங்க உறுப்பினர்களையும், வாசக நண்பர்களையும் வணக்கத்துடன் வரவேற்கிறோம்.....

Tuesday, 1 May 2012

      குற்றாலம் விக்டரி அரிமா சங்க புதிய நிர்வாகிககள் தேர்வு

      குற்றாலம் விக்டரி அரிமா சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் கடையநல்லூர் முத்துசாமியாபுரம் லயன்ஸ் மகாத்மா மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மருத்துவர் சி.எம்.மூர்த்தி தலைமை தாங்கினார். நல்லமுத்து தேர்வுக்குழு தலைவராக செயல்பட்டார். கூட்டத்தில் வரும் 2012-13 ஆண்டிற்கான புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
        தலைவராக ஆடிட்டர் நாராயணன், செயலாளர் மற்றும் உறுப்பினர் விரிவாக்கக்குழு தலைவராக டாக்டர் சி.எம்.மூர்த்தி, பொருளாளராக கனகராஜ்குமார் தேர்வு செய்யப்பட்டனர். வரும் ஆண்டின் வட்டாரத் தலைவராக லயன் நல்லமுத்து பரிந்துரைக்கப்பட்டார். உடனடி முன்னாள் தலைவராக ராஜு, முதல் துணைத் தலைவராக அழகுராஜ், இரண்டாம் துணைத்தலைவராக வெங்கடேஷ்வரன், துணைச் செயலாளராக இசக்கிலால்சிங், துணைப் பொருளாளராக முருகேசன் லயன் டேமராக ஜாகிர் உசேன், டெயில் டிவிஸ்டராக தெய்வநாயகம், நிர்வாகக்குழு உறுப்பினர்களாக தேவராஜ், டாக்டர் பாலசிங், கணேசமூர்த்தி தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட முத்தலைவர்களை நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் டார்க்டர் ராஜ்குமார் ஆறுமுகச் சாமி, வானமாமலை, சங்கரநாராயணன், வள்ளிநாயகம் உள்ளிட்ட உறுப்பினர்கள் பாராட்டினர்.

No comments: