தளத்திற்கு வந்திருக்கும் அரிமா சங்க உறுப்பினர்களையும், வாசக நண்பர்களையும் வணக்கத்துடன் வரவேற்கிறோம்.....

Sunday, 1 July 2012

குற்றாலம் விக்டரி அரிமா சங்க முத்தலைவர்கள் பதவியேற்பு நிகழ்வு

     குற்றாலம் விக்டரி அரிமா சங்கம் மற்றும் கடையநல்லூர் கோல்டன் பிரீஸ் அரிமா சங்க முத்தலைவர்கள் பதவியேற்பு நிகழ்வு 01.07.2012 ஞாயிறு காலை 10.00 மணிக்கு கடையநல்லூர், முத்துசாமியாபுரத்தில் உள்ள லயன்ஸ் மகாத்மா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் மிகச் சிறப்புடன் நடைபெற்றது.

     அரிமா மாவட்டம் 324 பி3 மாவட்ட முன்னாள் ஆளுநர் எஸ்.முருகேசமூர்த்தி எம்.ஜே.எப் முத்தலைவர்களை பதவியில் அமர்த்தி கௌரவித்தார்.

 குற்றாலம் விக்டரி அரிமா சங்க தலைவராக லயன் ஆடிட்டர் ஆர்.நாராயணன்,  செயலாளராக டாக்டர் சி.எம்.மூர்த்தி எம்.ஜே.எப், பொருளாளராக கே.கனகராஜ்குமார் முறையே பதவியேற்றுக் கொண்டனர்.

  கடையநல்லூர் கோல்டன் பிரீஸ் அரிமா சங்க தலைவராக திருமதி தாயம்மாள், செயலாளராக திருமதி டாக்டர் தங்கம் மூர்த்தி, பொருளாளராக திருமதி விஜயலட்சுமி ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

  இன்றைய நிகழ்ச்சியில் 4ன்கு பள்ளிகளுக்கு ஆர்.ஓ.சிஸ்டம் ஆடிட்டர் நாரயணன் அவர்களால் வழங்கப்பட்டது. கடையநல்லூர் வட்டாரத்தில் 2010-11கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு, மற்றும் 12ம் வகுப்புகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு, ஊக்கத் தொகையாக முறையே 1000ம் ரூபாயும் வழங்கப்பட்டது இதில் 22மாணவர்கள் பயனடைந்தார்கள். 

  தையல் மிஷின் ஒருவருக்கு வழங்கப்பட்டது, வறுமையில் உள்ள குடும்பத்தார்களுக்கு முறையே அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதனால் பயன் பெற்றோர் 10பேர்கள் ஆவர்.

ஆடிட்டர் நாரயணன் மூலம் ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வரும் இலவச அரிசி, மற்றும் உணவுப் பொருட்களும் முறையே வழங்கப்பட்டது.

ஏழை நோயாளிகள் இருவருக்கு ஒரு மாதம் உபயோகப்படும் வகையில் மருந்துப் பொருட்களும்,  ஊட்டச்சத்து மிக்க மருந்து பொருட்கள் 15 நோயாளிகளுக்கும் டாக்டர் சி.எம்.மூர்த்தி எம்.ஜே.எப் அவர்களால் வழங்கப்பட்டது.

  பசுமைப்புரட்சியை மேம்படுத்தும் வகையில் கடையநல்லூர் நகரைச் சுற்றியுள்ள பள்ளி வளாகங்களில் மரச் செடிகள் நடும் நிகழ்வு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்தது. அம் மரங்களை நன்கு பராமரித்து வந்த ஐந்து பள்ளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

  பொது சேவையில் ஈடுபட்ட அமைப்பிற்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
பதவியேற்பு நிகழ்சி துவங்கியது. முதலில் 
கொடி வணக்கம் - லயன் ஜாஹிர்  வாசிக்கிறார்....
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்....
புதிய தலைவர் பதவியேற்கும் லயன் ஆடிட்டர் ஆர்.நாராயணன் அவர்களுக்கு முந்தைய ஆண்டின் தலைவர் பொறுப்பில் இருந்த லயன் ராஜு தனது பொறுப்புக்களை அவரிடம் தருகிறார்.
முந்தைய ஆண்டின் செயலாளர் பொறுப்பினை வகித்த
 லயன் ஜாஹிர் அந்த பொறுப்பினை  
லயன் டாக்டர் சி.எம்.மூர்த்தி எம்.ஜே.எப் அவர்களிடம் ஒப்படைக்கிறார்.
பொருளாளர் பொறுப்பு வகித்த லயன் தேவராஜ், 
அந்த பொறுப்பினை லயன் கே.கனகராஜ் குமாரிடம் ஒப்படைக்கிறார்.
கடையநல்லூர் கோல்டன் பிரீஸ் அரிமா சங்க தலைவர் பதவி திருமதி தாயம்மாள் கந்தசாமி அவர்களிடம் ஒப்படைக்கிறார் மண்டல தலைவர் லயன் சண்முக சுந்தரம் அவர்கள்.
பொருளாளர் பதவியினை டாக்டர் விஜயலட்சுமி ரங்கநாதன் அவர்களுக்கும்,
செயலாளர் பதவியை டாக்டர் தங்கம்மூர்த்தி அவர்களும் தரப்படுகிறது.
பதவியேற்பு செய்வித்து குற்றாலம் விக்டரி அரிமா சங்க தலைவர் 
ஆடிட்டர் லயன் ஆர். நாராயணன் அவர்களுக்கு 
நினைவு பட்டனை அளிக்கிறார் அரிமா மாவட்டம் 324 பி3 த்தின்
 முன்னாள் ஆளுநர் லயன் எஸ்.முருகேசமூர்த்தி எம்.ஜே.எப்.

பட்டயத்தலைவரும், குற்றாலம் விக்டரி அரிமா சங்க செயலாளராக பதவியேற்றுள்ள டாக்டர் சி.எம்.மூர்த்தி எம்.ஜே.எப் அவர்களுக்கு நினைவு பட்டன் அளிக்கிறார் முன்னாள் கவர்னர் அவர்கள்.

கடையநல்லூர் வட்டாரத்தின் 2010-2011ஆம் ஆண்டின் சிறந்த பள்ளிக்கான விருதினை ஹிதாயத்துல் இஸ்லாம் பள்ளி பெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் அதை பெற்றுக்கொண்டனர்.



மூன்று பள்ளிகளுக்கு தண்ணீர் சுத்திகரிப்பு 
சாதனம் (ஆர்,ஓ) சிஸ்டம் இலவசமாக வழங்கப்பட்டது.

ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அவர்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவிடும் வகையில் தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

ஏழை மாணவருக்கு ஒரு மாதத்திற்கான
 ஊட்டச்சத்து மிக்க மருந்து பொருட்கள் வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்ட பசுமைப்புரட்சி... 
அது சமயம் கடையநல்லூர் நகரைச் சுற்றி அமைந்துள்ள 
கிராமப்புற பள்ளிக்கூடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. 
 நடப்பட்ட மரக்கன்றுகளை சிறப்புடன் பராமரித்ததை பாராட்டும் விதமாக, கடையநல்லூர் லயன்ஸ் மகாத்மா மெட்ரிக் பள்ளிக்கு “லயன்ஸ் கிரின் அவார்டு“ நினைவுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பதவியேற்பு நிகழ்ச்சியை பெருமை கொள்ளும் வகையில் நடத்தி தந்த 
அரிமா மாவட்ட முன்னாள் ஆளுநர் லயன் எஸ்.முருகேச மூர்த்தி அவர்களுக்கு சால்வை மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

செயலாளர் லயன் டாக்டர் சி.எம்.மூர்த்தி அவர்களை வட்டாரத் தலைவர் லயன் ஏஆர்.நல்லமுத்து மற்றும் அரிமா உறுப்பினர்கள் பாராட்டினர்.

No comments: