29.07.2012 அன்று கடையநல்லூர் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வைத்து , கிருஷ்ணன் கோவில் ஸ்ரீ சங்கரா கண் மருத்துவ மனையுடன் இணைந்து குற்றாலம் விக்டரி அரிமா சங்கம், கடையநல்லூர் கோல்டன் பிரீஸ்அ ரிமா சங்கங்கள் இணைந்து மாபெரும் இலவச கண் சிகிட்சை முகாம் நடத்தியது.
இம் முகாமில் 250க்கும் மேற்பட்ட கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிட்சை பெற்றுச் சென்றனர். முகாமில் தேர்வு செய்யப்பட்ட 20 கண்புரையுள்ள நோயாளிகள் அன்று மதியமே அறுவை சிகிட்சைக்காக சங்கரா கண்மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இம் முகாம் சிறப்புடன் நடைபெற ஒத்துழைப்பு நல்கிய ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளி மேலாளர் அவர்களுக்கு நன்றி பாராட்டப்பட்டது.
இம் முகாம் பற்றிய விளம்பர துண்டுப் பிரசுரம் அடித்து தந்து உதவிய லயன் தெய்வநாயம் அவர்களுக்கும், நோயாளிகளுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்து தந்து முகாம் முழுவதும் உடன் இருந்து பணியாற்றிய லயன் லால்சிங் அவர்களுக்கும், நன்றி பாராட்டப்பட்டது.
மேலும் உடனிருந்து ஒத்துழைப்பு தந்து பணியாற்றிய லயன் ஜாஹிர் உசேன், மற்றும் அரிமா உரிப்பினர்களுக்கும் நன்றி பாராட்டப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்த சங்கத்தின் தலைவர் லயன் ஆடிட்டர் ஆர்.நாராயணன், சங்கத்தின் பட்டயத்தலைவரும், செயலாளருமான டாக்டர் சி.எம்.மூர்த்தி, பொருளாளர் கே.கனகராஜ் குமார் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment