08.08.2012 மதியம் 3.30 மணியளவில் கடையநல்லூர் முத்துசாமியாபுரத்தில் உள்ள லயன்ஸ் மகாத்மா மெட்ரிக் பள்ளியில் வைத்து 2012-13ம் ஆண்டின் முதல் கூட்டு மாவட்ட கூட்டுக்கூட்டம் அரிமா மாவட்டம் 324 பி3 ஐ சார்ந்த காரைக்குடி சிட்டி அரிமா சங்கம் இணைந்திருந்தது. கடையநல்லூர் கோல்டன் பிரீஸ் அரிமாசங்கம், குற்றாலம் விக்டரி அரிமா சங்க அரிமா உறுப்பினர்கள் மகிழ்வோடு கலந்து கொண்ட நிகழ்வு
மாலை 3.30 மணியளவில் துவக்க நிகழ்வாக பள்ளி மாணவ, மாணவியர் பங்கு பெற்ற நடனநிகழ்ச்சிகளும், கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி ஆகியவை நடைபெற்றது. இன்நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவ, மாணவியருக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் நிகழ்வு , மூன்று சங்கங்களின் உறுப்பினர்கள் பள்ளி வளாகத்தில் ஆங்காங்கே மரக்கன்றுகளை நட்டனர்.
இதன் மூலம் நாம் மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால், மரக்கன்றுகள் நட்டு, அதனை பராமரிப்பதால் இயற்கை வளங்கள் மென்மேலும் வலுப்பெறும் என்பது நிதர்சனம். கடந்த ஆண்டு பன்னாட்டு அரிமா சங்கத்தலைவர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான மரக்கன்றுகள் நட்டோம் என்பதை பெருமையோடு பதிவு செய்கிறோம். குறிப்பாக குற்றாலம் விக்டரி அரிமா சங்கம், மற்றும் கடையநல்லூர் கோல்டன் பிரீஸ் அரிமா சங்கங்கள் இணைந்து கடையநலலூர் மற்றும் சுற்றுப்புற ஊர்களான செங்கோட்டை, தென்காசி, இடைகால், புலியுர் ஆகிய ஊர்களில் உள்ள 13க்கும் மேற்பட்ட பள்ளி வளாகங்களில் 700க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டிருக்கிறோம் என்பது மனநிறைவான சேவையே
இதனை பார்க்கும் நண்பர்கள் வீட்டிற்கு ஒரு மரக்கன்றுகளை நட்டு அதனை பராமரித்து வளர்த்து வருவது நமக்கும் நம் சுற்றுப்புறத்திற்கும் மிகப்பெரும் பயனைத் தரும் என்பது உண்மை.
மாணவர்கள் கலந்து கொண்ட நடனப் போட்டி
பரிசு பெற்ற மாணவர்களுடன் நமது அரிமாக்கள்
அடுத்த நிகழ்வாக மரக்கன்றுகள் நடுவது
லயன் ஜாஹிர் மற்றும் அரிமா வட்டார தலைவர்
லயன் நல்லமுத்து மரம் நடும் காட்சி
லயன் நல்லமுத்து மரம் நடும் காட்சி
குற்றாலம் விக்டரி அரிமா சங்க தலைவர் ஆர்.நாராயணன்,
செயலர் டாக்டர் சி.எம்.மூர்த்தி எம்.ஜே.எப் அவர்கள் மரம் நடும் காட்சி
செயலர் டாக்டர் சி.எம்.மூர்த்தி எம்.ஜே.எப் அவர்கள் மரம் நடும் காட்சி
காரைக்குடி சிட்டி அரிமா சங்கத்து
அங்கத்தினர் மரக்கன்று நடுகிறார்கள்
கூட்டு மாவட்ட கூட்டம் துவங்கியது கொடிவணக்கம்...
அரிமா வழிபாடு வாசிக்கிறார் லயன் வெங்கடேஸ்வரன்
அரிமா இசக்கிலால் சிங் தனது கனிவான பேச்சால்
செயலாக்கம் குறித்து பேசினார்
செயலாக்கம் குறித்து பேசினார்
அரிமா ஆர்.நாராயணன் தனது தலைமை உரையை நிகழ்த்தினார்
காரைக்குடிசிட்டி அரிமா பொறுப்பாளர்களுக்கு இனிய நினைவு பரிசுகள்
கூட்டம் இனிதே நிறைவுற்றது
அரிமா சங்கம் தோழமை இணைப்புப் பாலமாக இருக்கிறது என்பதை இது போன்ற நிகழ்வுகள் நினைவில் நிறுத்துகிறது.
No comments:
Post a Comment