குற்றாலம் விக்டரி அரிமா சங்கத்திற்கு ஆளுநர் அதிகாரபூர்வ வருகை 16.12.2012 அன்று சேவை விழாவாக மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மாலை ஆறு மணிக்கு ஆளுநர் பி.ஜே.எம்.ஏசுபாலன் அவர்கள் வருகை தந்தார்கள். முதல் நிகழ்வாக கடையநல்லூரில் உள்ள ஹிதாயத்துல் இஸ்லாம் மேனிலைப் பள்ளி, மற்றும் மேலப்பாளையம் இந்து நடுநிலைப்பள்ளி ஆகிய இரு பள்ளிகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தரும் RO SYSTEM கருவியை திறந்து வைக்கும் சேவை நிகழ்வாக துவங்கியது. இந்த இரண்டு கருவிகளையும் குற்றாலம் விக்டரி அரிமா சங்கத்தின் தலைவர் ஆடிட்டர் ஆர்.நாராயணன் அவர்களின் முழு பொறுப்பில் வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
அதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு முறைப்படி கூட்டம் துவங்கியது. இந்நிகழ்வை சங்கத்தின் தலைவர் லயன் ஆர். நாராயணன் அவர்கள் நடத்தினார். வழக்கமான சம்பிரதாய நிகழ்வுகளுக்குப்பிறகு சேவைகள் வழங்கும் நிகழ்வு துவங்கியது. வருடந்தோறும் ஏழைகளுக்கு வழங்கி வரும் உணவுப் பொருட்கள், ஆடைகள், மருத்துவ உதவிகள், ஊக்கத் தொகை என அடுக்கடுக்காய் சேவைகள் தொடர்ந்தன.
நெடுநாளைய திட்டமாய் செயல் படுத்தி வரும் தலைவர் ஆர். நாராயணன் அவர்களின் சேவையை பார்த்துபூரித்து போனோம் என்றால் அது மிகையல்ல.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்ட மூன்று பிள்ளைகள். அக் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளது. கணவர் சமீபத்தில் எதிர்பாராத விபத்தில் மரணித்த நிலையில் வாழ்வாதாரம் இழந்த நிலையில் நிர்கதியாய் நிற்கும் அக் குடும்பத்தை முழுமையாக தத்தெடுத்துக் கொண்டு அவர்களுக்கு தேவையான பொருட்களையும், அம்மூன்று பிள்ளைகளின் படிப்பு செலவு முழுமையையும் தானே ஏற்றுக் கொண்டு அதை தடங்கலில்லாமல் செய்து வரும் அவரின் சேவையுள்ளத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
இன்றும் சில மாணவர்களின் படிப்பிற்கு தேவைப்படும் பண உதவியையும், அவர் வழங்கினார்.
* மருத்துவ உதவி
* கல்வி உதவி
* ஆசிரமத்திற்கு தேவையான உணவு செய்யும் பாத்திரம்
* மற்றொரு ஆசிரமத்திற்கு தேவையான பொருள் உதவி
* ஏழைகளுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டுவரும் உணவுப் பொருட்கள்
* இரண்டு சலவைத் தொழிலாளர்களுக்கு அலுமினிய தேய்ப்புப் பெட்டிகள்
இன்னும் பல..... சேவை சேவை என சேவைகளால் முழுமை பெற்றது அன்றை நிகழ்வுகள். சேர்ந்திருந்தோம் சேவைகள் செய்தோம். இதோ அந்நிகழ்வின் நிஜங்கள் நிழல்களாய்....
No comments:
Post a Comment