சுதந்திர தின விழா
லயன்ஸ் கிளப் குற்றாலம் விக்டரி, லயன்ஸ் கிளப் கடையநல்லூர் கோல்டன் பிரீஸ், லயன்ஸ் மகாத்மா மெட்ரிக் பள்ளி இணைந்து நடத்திய சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15 காலை 8.30 மணியளவில் கடையநல்லூர் முத்துசாமியாபுரம் லயன்ஸ் மகாத்மா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் வைத்து மிகச்சிறப்பாக நடைபெற்றது.
எக்ஸனோரா அமைப்பின் மாவட்ட பொறுப்பாளரும், கடையநல்லூர் கோல்டன் பிரீஸ் அரிமா சங்க பொருளாளருமான லயன் டாக்டர், முனைவர் திருமதி விஜயலட்சுமி ரங்கநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
குற்றாலம் விக்டரி அரிமா சங்க உறுப்பினர் புளியங்குடி நகர் நல மருத்துவர் எம்.சி.ராஜ்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
நிகழ்ச்சியில் குற்றாலம் விக்டரி அரிமா சங்க தலைவர் லயன் ஆடிட்டர் ஆர்.நாராயணன், செயலாளர் மருத்துவர் லயன் சி.எம்.மூர்த்திஎம்.ஜே.எப், பொருளாளர் லயன் கனகராஜ் குமார், வட்டாரத் தலைவர் ஏஆர்.நல்லமுத்து. இதழாசிரியர் லயன் இசக்கிலால்சிங், இணையஇதழ் ஆசிரியர் லயன் ஜாஹிர் உசைன், லயன் தேவராஜ், கடையநல்லூர் கோல்டன் பிரீஸ் அரிமா சங்க தலைவர் லயன் தாயம்மாள், செயலாளர் லயன் திருமதி டாக்டர் தங்கம் எம்ஜேஎப், பொருளாளர் லயன் திருமதி விஜயலட்சுமி, மற்றும் அரிமா உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் குற்றாலம் விக்டரி அரிமா சங்க தலைவர் லயன் ஆடிட்டர் ஆர்.நாராயணன், செயலாளர் மருத்துவர் லயன் சி.எம்.மூர்த்திஎம்.ஜே.எப், பொருளாளர் லயன் கனகராஜ் குமார், வட்டாரத் தலைவர் ஏஆர்.நல்லமுத்து. இதழாசிரியர் லயன் இசக்கிலால்சிங், இணையஇதழ் ஆசிரியர் லயன் ஜாஹிர் உசைன், லயன் தேவராஜ், கடையநல்லூர் கோல்டன் பிரீஸ் அரிமா சங்க தலைவர் லயன் தாயம்மாள், செயலாளர் லயன் திருமதி டாக்டர் தங்கம் எம்ஜேஎப், பொருளாளர் லயன் திருமதி விஜயலட்சுமி, மற்றும் அரிமா உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சுதந்திர தின கொண்டாட்டத்தில் பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும், முழுமையாக்கக் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி மிகச் சிறப்பாக நடந்தது. தொடர்ந்து ஆசிரியர்கள் கலந்து கொண்ட விளையாட்டுப் போட்டியும், அரிமா சங்க உறுப்பினர்கள் பங்குபெற்ற விளையாட்டுப் போட்டியும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவின் துவக்கத்தில் சுற்றுப்புற பாதுகாப்பு குறித்து எக்ஸனோரா அமைப்பின் பொருப்பாளர் திருமதி விஜயலட்சுமி ரங்கநாதன் அவர்கள் சுற்றுப்புற பாதுகாப்பு, பசுமைப் புரட்சி குறித்து விரிவா உரை நிகழ்த்தினார். அவரது உரையில் பயனுள்ள பல தகவல்கள் இருந்தன.
எக்ஸனோரா அமைப்பின் மாவட்ட பொறுப்பாளரும்,
கடையநல்லூர் கோல்டன் பிரீஸ் அரிமா சங்க பொருளாளருமான
டாக்டர், முனைவர்விஜயலட்சுமி ரங்கநாதன் அவர்களும்,
குற்றாலம் விக்டரி அரிமா சங்க உறுப்பினர்,
புளியங்குடி நகர் நல மருத்துவர் எம்.சி.ராஜ்குமார் அவர்களும்
தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.

மாணவர்களின் கொடிவணக்க மரியாதை
மாணவர்கள் பங்குபெற்ற விளையாட்டுப் போட்டிகள்
மாணவர்கள் பங்குபெற்ற விளையாட்டுப் போட்டிகள்
மாணவர்களின் பெற்றோர்கள் பங்கு பெற்ற விளையாட்டுப் போட்டிகள்
அரிமா உறுப்பினர்கள் பங்கு பெற்ற விளையாட்டுப் போட்டிகள்
மாணவர்கள் பங்குபெற்ற உரையாடல் நிகழ்ச்சி
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கலைநிகழ்ச்சியில்
கலந்து கொண்ட மாணவர்களுடன் நமது அரிமாக்கள்
பரிசு பெற்ற மாணவர்களுடன் நமது அரிமாக்கள்
பரிசு பெற்ற மாணவர்கள்களுடன் நமது அரிமாக்கள்
சுற்றுப்புறத் தூய்மை ஒரு முக்கிய கவனம்
நம் வாழ்க்கைத் தரம் மேம்பட நமது சுற்றுப்புறத்தைச் சுகாதாரமாகவும் சுத்தமாகவும் வைப்பது அவசியம். இதற்கு முதலில் குப்பைக் கழிவுகளைச் சரியான முறையில் அகற்றுவது இன்றியமையாதது. இதற்கான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். குப்பையை அகற்ற வேண்டுமென்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் அதை எப்படிச் செய்வது? குப்பைகளை அகற்றுவதற்கு மிகவும் எளிதான வழி அதைச் சிறப்பான முறையில் வகைப்படுத்துவதாகும். இதில் மிக முக்கியமான ஏழு வகைகளைப் பார்க்கலாம். இவற்றைத் தனித்தனியே அகற்றுவது, கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
உணவுக் கழிவுகள்: அனைத்து உணவருந்தும் விடுதிகளும் இலை, மீதமுள்ள உணவுகள் ஆகியவற்றை பெருமளவில் பொது இடங்களில் கொட்டுகிறார்கள். இதில் கையேந்தி பவன் என்று சொல்லப்படுகிற நடமாடும் வண்டிகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதுபோல் கல்யாண மண்டபங்கள், கேன்டீன்கள், கோயில் வளாகங்கள், குடியிருப்புகள் மற்றும் போக்குவரத்து நிலையங்கள் ஆகியவற்றிலும் இந்த உணவுக் கழிவுகள் அதிகம் காணப்படுகின்றன. இவை சூரிய வெப்பத்தில் காய்ந்து போவதற்கு முன், மிகவும் அழுகிய நிலையில் பெரும் நாற்றத்தையும் கண்களுக்கு மிக மோசமான தோற்றத்தையும் அளிக்கின்றன. இதனால் சுற்றுப்புற தூய்மை கெட்டு பல்வேறு வியாதிகளின் உற்பத்திக்கூடமாக ஆகிவிடுகிறது என்பதை நாம் ஒப்புக்கொண்டாகவேண்டும்.
மருத்துவ நிலையக் கழிவுகள்: மருத்துவ நிலையங்களில் ஏற்படும் கழிவுகள் அனைத்தையும் தனியாகக் கொண்டு வருவது அவசியம். அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ரத்தப் பரிசோதனை நிலையங்கள், மருத்துவரின் ஆலோசனை மையங்கள் போன்ற எல்லா நிலையங்களிலும் கழிவுகளைச் சேகரிக்க வேண்டும்.
சந்தைக் கழிவுகள்: சந்தைகளில் மிகவும் அதிகமாக வருவது உணவுக் கழிவுகளாகும். எல்லா பொது மற்றும் தனியார் சந்தைகளிலும் உணவுக் கழிவுகளை அரைத்துக் கூழாக்கும் எந்திரங்களை அரசு அமைக்க முன்வரும் பட்சத்தில் அக்கழிவுகள் மறுசுழற்சி மூலம் பயன்பாட்டிற்கு வரும் என்பது உண்மை.
காகிதக் கழிவுகள்: அனைத்து வகையான காகிதங்கள், அட்டைகள், அட்டைப் பெட்டிகள், பழைய புத்தகங்கள், ஏடுகள் போன்றவை இந்த வகைக் கழிவில் அடங்கும். இவற்றை மொத்தமாகச் சிப்பம் சிப்பமாகக் கட்டி “பேப்பர் மில்’களுக்கு அனுப்பும் பட்சத்தில் மில்களில் கூழாக்கப்பட்டு பிறகு புதிய பேப்பர்கள் செய்யப் பயன்படுகிறது.
விறகுக் கழிவுகள்: நமது நாட்டின் பல நகரங்களில் ஏராளமான செடி, கொடி, மரங்கள் உள்ளன. இவற்றிலிருந்து நிறைய விறகுகளும், எரிபொருள்களும் உற்பத்தி யாகின்றன. ஆனால் நகரத்து மக்கள் இவற்றை உபயோகப்படுத்தாமல் வீட்டிற்கு வெளியே வீசி விடுகின்றனர். இதனால் இந்த விறகுகளும் ஓலைகளும் குப்பைகளோடு கலந்து விடுகின்றன. இது குப்பைச் சுமையை அதிகப்படுத்துகின்றது. இந்தச் சுமையைக் குறைப்பதற்கு, விறகுகளும் அதனைச் சார்ந்த எரிபொருள்களும் தனியாகச் சேகரிக்கப்பட்டு, அதனை மின் உற்பத்தி போன்ற பயனுள்ள பணிகளுக்குப் பயன்படுத்த முடியும் என்பதை உணர வேண்டும்.
மண் மற்றும் கட்டட இடிபாடுகள்: தனியார் மற்றும் அரசுத் துறைகள் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகின்றன. இதன் விளைவாக ஏராளமான மண் மற்றும் கட்டிட இடிபாடுகள் உற்பத்தியாகின்றன. இவை நகரத்திற்குள்ளும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பள்ளங்களை நிரப்புவதற்கும், சாலைகள் அமைப்பதற்கும் மற்றும் பல கட்டட வேலைகளுக்கும் பயன்படுகிறது.
மீதமுள்ள கழிவுகளின் கூட்டு: மேற்சொன்ன 6 வகைக் கழிவுகளை ஆரம்ப நிலையிலேயே தனித்தனியே பிரித்து அகற்றி விட்ட பிறகு மீதமுள்ள கழிவுகளைக் கூட்டாக அகற்றி விடலாம். முதலிலேயே பெரும் பகுதி கழிவுகளை அகற்றி விடுவதனால் இந்த மீதமுள்ள கழிவுகளின் அளவு மிகவும் குறைந்து விடும்.
முடிவாக, குப்பைகள் அகற்றும் அவசியத்தை, பள்ளி மாணவர்களின் இளம் மனத்தில் பதிய வைக்கவேண்டும். அவர்கள் பிற்காலத்தில் பொறுப்புகள் வகிக்கும் போது தக்க நடவடிக்கைகள் எடுப்பார்கள். நாம் குப்பைகளை அகற்றுவதற்கு முதன்மை முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் மிகவும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்படுவோம். ஆகவே குப்பைகளை அகற்றுவோம். மேலான வாழ்க்கை நிலையைப் பெறுவோம்.
No comments:
Post a Comment