தளத்திற்கு வந்திருக்கும் அரிமா சங்க உறுப்பினர்களையும், வாசக நண்பர்களையும் வணக்கத்துடன் வரவேற்கிறோம்.....

Thursday, 23 August 2012

நம் கண்களை பாதுகாத்துக் கொள்வோம்.

நமது கண்பார்வையினை பாதுகாத்துக் கொள்ள அது குறித்த விழிப்புணர்வுடன் செயலாற்றிக் கொண்டிருந்தால் பார்வைக் குறைபாடுகளிலிருந்து நம்மை நாம் விடவித்துக் கொள்ளலாம். அரிமாக்களாகிய நாம் இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக அவசியம். ஏறக்குறை கடந்த 100 ஆண்டுகளாக அரிமாக்கள் கண்ணொளி காப்பது, கண்ணொளி மீட்பது, கண்ணொளி அளிப்பது முதலானவற்றில் மிகச் சிறந்த முறையில் சேவை செய்து கொண்டிருக்கின்றோம் என்பதில் மிக்க பெருமை அடைகிறோம் இதோ சில துளிகள்

1) கண்புரை அறுவை சிகிட்சை 8 மில்லியனுக்கு மேல்

2) கண்சிகிட்சை முகாம்கள், கண் கண்ணாடிகள் மற்றும் இதர மருத்துவ உதவிகள் மூலம் 14 மில்லியம் குழந்தைகளின் பார்வை பாதுகாக்கப்பட்டுள்ளது.

3) 30 மில்லியன் மக்களின் கண்பார்வை இழப்பு தடுக்கப்பட்டுள்ளது.

4) 315 கண் மருத்துவமனைகள் கட்டுப்பட்டு 6,50,000 பேருக்கு கண் பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு 100 மில்லியன் மக்களின் கண் பார்வை பாதுகாக்கப்பட்டுள்ளது.

5) குழந்தைகளுக்கான கண் பாதுகாப்பு மையங்கள் மூலமாக 120 மில்லியன் குழந்தைகளின் கண் பார்வை பாதுகாக்கப் பட்டுள்ளது.

6) மணல்வாரி அம்மை (Measles) பாதிப்பால் கண் பார்வை இழப்பை தடுக்க ஆப்பிரிக்காவில் 41 மில்லியன் குழந்தைகளுக்கு அம்மை தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது.

7) எத்தியோப்பியாவில் “டிராக்கோமா” கண் நோயை கட்டுப்படுத்தும் மருந்தான அஸித்ரோமைசின் ஐ10 மில்லியன் மக்களுக்கு கொடுத்து கண்பார்வை பாதுகாக்கப்பட்டுள்ளது.

மேலும் பயன்படுத்தப்பட்ட கண் கண்ணாடிகளை சேகரித்து அவைகளை சரி செய்து மீண்டும் அளித்தல். கண் வங்கிகள் மூலம் பார்வைக்குறைபாடுகளை கண்டறிந்து சரி செய்தல், மற்றும் இதர உதவிகள் ஆகியவற்றை நம் அரிமாக்கள் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம். 1990 முதல் இன்றுவரை 415 மில்லியன் டாலருக்கு மேல் அரிமாக்களாகிய நாம் நிதி சேகரித்துள்ளோம். இவை குறித்து நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். என்றாலும் நாம் செய்கின்ற இச் சேவைகள் தொடர நாம் முழு முயற்சியுடன் ஈடுபடுதல் அவசியம். கண்புரை நோயால் பாதிக்கப்பட்டு கண்பார்வை குறைபாட்டுடன் அவதியுறுவதை தடுப்பது குறித்து அறிவோம். கண்புரைநோய் (Cataract) மிகத் தெளிவான கண்லென்ஸில், மேகன் போன்று படிவதால் கண்பார்வை குறை நேரிடும்.

கேமரா லென்ஸ் போன்று கண் லென்ஸ் நாம் பார்க்கும் பொருட்களின் ஒளியை முழுவதுமாக ஊடுருவச் செய்து பார்வையை தெளிவு படுத்துகிறது. 40-45 வயது வரை நாம் பார்க்கும் பொருளின் தூரத்திற்கேற்ப லென்ஸ் சுருங்கி, விரிந்து பார்வையை தெளிவுபடுத்திக் கொள்ளும், வயது அதிகமாக அதிகமாக லென்ஸ்ல் உள்ள புரோட்டீன் உடைவதால் வெண்மை படிந்து பார்வை பாதிக்கும். பார்வை சற்று மங்கலாகத் தெரியும். இதுவே கண்புரை நோய் எனப்படும். கண்புரை நோய் விரைவில் ஏற்படுக் காரணங்கள்

1)சர்ச்சரை வியாதி, 2)கண்ணில் நோய், 3)கண்ணில் அடிபடுதல், 4) முன்னோர்களுக்கு இருத்தல், 5)ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் பயன்படுத்துதல், 6)கதிர்வீச்சு அபாயம், 7)புகைபிடித்தல், 8)சூரிய வெளிச்சத்தில் அதிகம் அதிகம் பார்த்தல், 9)எவ்வித காரணம் இல்லாமை.

கண்புரை நோய் பாதிக்ப்பட்ட ஆரம்ப காலத்தில் பார்வையில் எவ்வித மாற்றமும் தெரியாது. கண்ணில் எவ்வித வலியும் ஏற்படாது. எனவே இந்நோய் பாதிப்பு ஆரம்பத்தில் தெரியாமல் இருநுது விடலாம். பார்வைக் குறைபாடு தெரியும் போதுதான் இது குறித்து தெரியவதும். எனவே 40 வயதிற்குமேல் கண்களை சோதித்துக் கொள்வது நல்லது. இனி கண்புரை நோயால் பாதிக்கப்படும் போது ஏற்படும் கண்பார்வை மாற்றங்களை தெரிவோம்.

1)கண்ணில்கூச்சம், 2)மங்கலாக, பனிபடர்தல் போன்று தெரிதல், 3)இரவில் மற்றும் மாலை நேரத்தில் பார்க்க சிரம்மாக இருத்தல், 4)இரு பொருட்களாக தெரிதல், 5)நிறங்களை காணுதலில் சிரமம், 6)வடிவங்களை தெரிவதில் சிரமம், 7)வெளிச்சத்தின் நடுவே கருமையாகத் தெரிதல்.

கண்புரை நோய் ஒரு கண்ணிலோ, அல்லது இரு கண்களிலா வரலாம். பாதிப்பு ஒன்றாக இல்லாமல் மாறுபடலாம். கண்கண்ணாடிகள் அணிபவர்களுக்கு அடிக்கடி கண்ணடியை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் கண்புரை நோய் பாதிப்பு உள்ளதா? என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம். முறையாக கண் மருத்துவரிடம் பரிசோதனை செய்து அவர்களின் ஆலோ சனைப்படி உரிய சிகிட்சை மேற்கொள்வதே நல்லது. ஆரம்ப காலத்தில் கண்புரை நோய் கண்டறியப்பட்டால் கண்கண்ணாடிகள், தேவையான ஒளி வெளிச்சம், கூலிங் கண்ணாடிகள் அணிவதன் மூலம் கட்டுப்படுத்தலாம். பார்வை மங்கலாகும் பட்சத்தில் கீழே விழுந்து கண்ணில் அடிபடுதலை தவிர்ப்பது மிக முக்கிய மானதாகும். பார்வை குறைய நேரிடும் போது அறுவை சிகிட்சை ஒன்றே கண் புரைநோய்க்கு முறையான ஏற்பாடாகும். அவசரமாக அறுவை சிகிட்சை செய்யத் தேவையில்லை. முறையாக கண்களை பரிசோதனை செய்து நன்முறையில் அறுவை கிசிட்சை மேற் கொள்வதே நல்லது. ஆனால் சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய்களால் கண்களில் பாதிப்பு இருந்தால் முதலில் கண்புரை நோய் அறுவை கிசிட்சை செய்து கொள்வது நல்லது. அறுவை சிகிட்சைக்குப் பின் கண் கண்ணாடிகள் அணிவதன் மூலம் பார்வையை நன்கு பெற முடியும். ஆரம்பகாலத்தில் கண்டறிந்து முறைப்படி அறுவை கிசிட்சை மேற்கொண்டால் கண்புரை நோய் முற்றி அதனால் ஏற்படும் பின்விளைவுகளான கண் உள்வலி, மிக முற்றிய கண்புரை ஆகிய வற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். கண்புரைநோய் தாக்குதலை கட்டுப்படுத்த மேலே கூறப்பட்டுள்ள காரணங்களை கண்டறிந்து தகுந்த மருத்துவ சிகிட்சையின் மூலம் காப்பாற்றிக் கொள்லாம். அதிக சூரிய ஒளியின் அல்ட்ரா வயலட் கதிர்கள் தாக்காமல் இருக்க கூலிங் கண்ணாடிகள் தகுந்த கண் மருத்துவரின் ஆலோசனைப்படி அணிதல் நல்லது. ஆலோசனையின்றி நாமாக கண்ணாடிகள் வாங்கி அணிவத தவறு.

கண் சிட்சை முகாம்கள் மூலம் கண்புரை அறுவை சிகிட்சை சேவை செய்து வரும் நம் அரிமாக்கள், அது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். கண்ணொளி காப்போம்.