2012-13ஆம் ஆண்டின் இரண்டாவது கூட்டு மாவட்ட கூட்டுக்கூட்டம் 16.8.2012 அன்று கடையநல்லூர் முத்துசாமியாபுரத்தில் உள்ள லயன்ஸ் மகாத்மா மெட்ரிக் பள்ளியில் வைத்து நடைபெற்றது.
இந்த முறை B3 மாவட்டத்தைச் சார்ந்த மதுரை கிழக்கு அரிமா சங்கம் இணைந்திருந்தது. இவ்விரு சங்கங்களும் மனமகிழ்வுடன் கலந்து கொண்ட ஒரு இனிமையான நிகழ்வு.
கூட்டம் 4. 30 மணியளவில் துவங்கியது, குற்றாலம் விக்டரி அரிமா சங்க தலைவர் லயன் ஆடிட்டர் நாராயணன் முறைப்படி துவக்கி வைத்தார்.
இவ்விரு சங்கங்களின் செயலாளர்கள் தத்தமது சங்கங்களின் இந்த ஆண்டின் துவக்கம் முதல் இன்றுவரை செய்திட்ட சேவைகளை பட்டியலிட்டார்கள். ஏழைகளுக்கு உதவுவதும். இல்லாதவருக்கு கொடுத்து அவர்கள் அடையும் சந்தோஷங்களைப் பார்த்து நெகிழ்ச்சியடையும் செய்திகள் இங்கு பரிமாறப்பட்டது.
எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் தங்களது சொந்த பணங்களை போட்டு செய்து வரும் இந்த சேவைகளால் இல்லாதவர்கள எத்தனையோ பேர்கள், பயன் பெறுகிறார்கள் என்பது நிதர்சனம். ஆனால் இது போன்ற செய்திகளை வெகுஜன பத்திரிக்கைகள் மக்களிடம் எடுத்துச் செல்வதில்லை. மக்கள் பணத்தைக் கொண்டு மக்களுக்கு பயன் பெறச்செய்யும் திட்டங்களுக்கு அதிகம் அதிகமான விளம்பரங்கள் தரப்படுவது வழக்கத்தை மீறிய செயலாகவே உள்ளது.
ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை அனைத்து கோயில்களிலும் அன்னதானம் வழங்கப்பட்டு வருவதா க மதுரை கிழக்கு அரிமா சங்க செயலாளர் தெரிவித்தார். பதவியேற்பு நிகழ்ச்சியின் போதே ரூபாய் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மதிப்பில் செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று தனது அறிக்கையில் தந்தார்.
குற்றாலம் விக்டரி அரிமா சங்க செயலாளர் லயன் டாக்டர் சி.எம்.மூர்த்தி MJF அவர்கள் த
மது ரையில்..... தமது சங்கமும் ரூபாய் 1.5 லட்சம் மதிப்பிலான சேவைத்திட்டங்கள் செய்திருக்கிறோம் என்று பெருமைபட தெரிவித்தார். தமது சங்கத்தின் தலைவர் லயன் ஆடிட்டர் ஆர்.நாராயணன் தனது சொந்த பொறுப்பில் தொடர்ந்து ஒவ்வொரு தமிழ் மாததுவக்கத்தில் இரண்டு ஏழைக் குடும்பங்களுக்கு ஒருமாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கிவருகிறார். மேலும் ஒரு ஏழைக்குடும்பத்தைச் சார்ந்த ஒரு மாணவியை 12ம் வகுப்பிலிருந்து தொடர்ந்து ஆசிரியர் படிப்பு முடியும் வரை படிப்பிற்காக ஆன மொத்த செலவை தானே ஏற்றுக் கொண்டு அது முடிந்து அப்பெண்ணிற்கு திருமணம் வரை தனது பொறுப்பில் முடித்துக் கொடுத்துள்ளார். தற்போது மிகவும் ஏழ்மையான ஒரு குடும்பத்தை இப்பொழுது தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்டுள்ளார் என தெரிவித்தார். இது போன்ற நிகழ்வுகள் அரிமா சங்கத்திற்கு பெருமை சேர்க்கும் செய்தியாகும்.
இரண்டு சங்கங்களின் தலைவர்களும் தாங்கள் சேர்ந்திருக்கும் சங்கங்களின் எதிர்கால சேவைத் திட்டங்கள் குறித்த செய்திகளை தந்தார்கள்.
நட்புரவுடன் இனிமையாய் கூட்டம் நிறைவுற்றது.
குற்றாலம் விக்டரி அரிமா சங்க தலைவர் லயன் ஆர்.நாராயணன், செயலாளர் லயன் டாக்டர் சி.எம்.மூர்த்தி எம்.ஜே.எப், பொருளாளர் லயன் கே.கனகராஜ்குமார் லயன் இசக்கிலால் சிங், லயன் ”மூன்” ஜாஹிர், லயன் வெங்கடேஸ்வரன், மதுரை கிழக்கு அரிமா சங்க முத்தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
குற்றாலம் விக்டரி அரிமா சங்க தலைவர்
லயன் ஆடிட்டர் ஆர்.நாராயணன் வரவேற்று பேசுகிறார்
செயலர் அறிக்கை தருகிறார் மதுரை கிழக்கு அரிமா சங்க செயலாளர்
இரு சங்கத்து தலைவர்கள் நினைவுப் பரிசுகளை பரிமாரிக்கொள்கிறார்கள்
இரு சங்கத்து செயலாளர்கள் நினைவுப் பரிசுகளை பரிமாரிக்கொள்கிறார்கள்
No comments:
Post a Comment