கண்ணொளி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பாதையில், சர்க்கரை நோயால் கண்பார்வை பாதிப்படைவது குறித்தும், தடுப்புமுறைகள் குறித்தும் இந்தப் பதிவில் காண்போம்.
காலையில் எழுந்தவுடன், எதுவும் உண்பதற்கு முன்பு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 100mgm/dl அதிகப்படாமல் இருத்தல் அவசியம். இல்லையெனில் பின்னர் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்படி மருத்துவ ஆலோசனையுடன் மருந்துகள் உட்கொண்டு, கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டால் சர்க்கரை நோயால் கண்கள் பாதிக்கப்படுவதிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.
சர்க்கரைநோயால் கண்களில் ஏற்படும் முக்கிய பாதிப்புகள்
1)விழித்திரையில் உள்ள இரத்தக் குழாய்கள் சேதமடைதல் (Diabetic Retinopathy)
2) கண்புரை-சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இளம் வயதிலேயே வர வாய்ப்புகள் அதிகம் (Cataract)
3) கண்களில் அழுத்தம் அதிகமாகி, பார்வை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வை இழத்தல் (Glaucoma) சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதற்கான வாய்ப்பு இருமடங்காகும். விழித்திரையில் உள்ள இரத்தக் குழாய்கள் வீக்கமடைந்து நீர் கசியலாம் அல்லது தேவையற்ற புதிய இரத்தக் குழாய்கள் வளரலாம். நல்ல பார்வைக்கு ஆரோக்கியமான விழித்திரை மிக அவசியம். விழித்திரை பாதிப்பு முதலில் நமக்கு தெரியாமல் இருந்து விடலாம். பார்வை இழந்த பின்னரே தெரியநேரிடும். எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனைப்படி முறையாக ஆறுமாதங்களுக்கு ஒரு முறை கண்களைப் பரிசோதித்து கண்பார்வைக்குறைபாடுகள் ஏற்படாதவாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இரு கண்களையும் பாதிக்கும் அபாயம் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதிகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கருவுற்ற காலத்தில் சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தால், கண்களை உரிய காலத்தில் பரிசோதித்து கண்பார்வை குறைபாடுகள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.
விழித்திரை பாதிப்பை தெரிந்து கொள்ளும் வழிகள்—
1) முறைப்படி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கண்களைப் பரிசோதித்தல்
2) மங்கலான பார்வை
3) சில நொடிகள் கண்பார்வை தெரியாதிருத்தல்
4) புள்ளிகள் போன்று தெரிவது
5) பார்வை நாள்பட தொடர்ந்து மங்கலாகிக் கொண்டிருத்தல்
6) முழு பார்வை இழப்பு
பார்வை தக்கவைக்க சிகிட்சை முறைகள்
1) இரத்தத்தில் சர்க்கரை நோயின் அளவு, இரத்த அழுத்த மற்றும் கொழுப்புச் சத்து ஆகியவற்றை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளுதல் அவசியம்.
2) லேசர் அறுவை சிகிட்சை மூலம் பார்வைக் குறைபாட்டை நிவர்த்தி செய்தல்
3) இரத்தக் கசிவு அதிகமாக இருப்பின், அறுவை சிகிட்சை மூலம் கசிவு இரத்த்த்தை அகற்றுதல்
4) சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்க் எந்தவகை சர்க்கரைநோய் என்பதை மருத்துவர் மூலம் முறைப்படி தெரிந்து கொண்டு சிகிட்சை பெறுங்கள்.
சர்க்கரை நோய் பலவிதம்
1) முதல் வகையா, இரண்டாம் வகையா
2) மன அழுத்தத்தால் சர்க்கரை நோயா
3) கணையத்தில் கிருமிதாக்குதலா
4) கல் அடைத்தலா
5) பாரம்பரிய சர்க்கரை நோயா
6) பழக்க வழக்கத்தால் வந்த சர்க்கரை நோயா
7) இன்சுலின் குறைபாடா
8) சர்க்கரை உணவிலா அல்லது உடலிலா
9) குறைவாகச் சாப்பிட்டும் கட்டுப்படவில்லை – கணைத்தில் குற்றமா
10) மாத்திரையா அல்லது ஊசியா
எனவே உடலில் சர்க்கரையின் அளவு எவ்வாறுள்ளது என்பதை மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்திக்கொண்டு அதற்கு தகுந்த மருத்துவ சிகிட்சையை மேற்கொள்வதன் மூலம் சர்க்கரை நோயால் கண்களில் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

மருத்துவ குறிப்புகளை நமக்காக தந்தவர்....
லயன் டாக்டர் C.M.மூர்த்தி MJF
பட்டயத்தலைவர், குற்றாலம் விக்டரி அரிமா சங்கம்
No comments:
Post a Comment