தளத்திற்கு வந்திருக்கும் அரிமா சங்க உறுப்பினர்களையும், வாசக நண்பர்களையும் வணக்கத்துடன் வரவேற்கிறோம்.....

Thursday, 11 October 2012

முதல் வட்டார ஆலோசனைக் கூட்டம்

       

முதல் வட்டார ஆலோசனைக் கூட்டம்


     முதல் வட்டார ஆலோசனைக் கூட்டம் மற்றும் கூட்டு மாவட்டக் கூட்டுக்கூட்டம் விக்கிரமசிங்கபுரம்  சேக்கரட் ஹார்ட் மேல் நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டாரத் தலைவர் நல்லமுத்து தலைமை தாங்கினார். விக்கிரமசிங்கபுரம் அரிமா சங்கத் தலைவர் ஜாண்  மைக்கேல் ராஜ் முன்னிலை வகித்தார். வட்டாரத் தலைவர் நல்லமுத்து 4 சங்கங்களின் செயல்பாடுகள் குறித்து பாராட்டிப் பேசினார். கூட்டத்தில் அடையக்கருங்குளம் அன்னை சேவா ஆஸ்ரமத்திற்கு ரூபாய் 1500 மதிப்பிற்கு 50 கிலோ அரிசி இலவசமாக வட்டாரத் தலைவரால்  வழங்கப்பட்டது. நமது சங்க செயலாளர் டாக்டர் மூர்த்தி சங்க சேவைகள் குறித்து விளக்கிப் பேசினார். நினைவுப்பரிசுகள்
வட்டாரத் தலைவர் அவர்களால் பங்கு பெற்ற அனைவருக்கும் வழங்கப்பட்டது. விக்கிரமசிங்கபுரம் அரிமா சங்க  பொருளாளர் மூர்த்தி நன்றி கூறினார். 



First Zonal Advisory Meeting & Zonal Inter Club Meeting

First Zonal Advisory Meeting & Zonal Inter Club Meeting was held at Sacred Heart HSS, Vickramasingapuram organised by Lions Club of Vickramasingapuram PSTs , Jt.Sec and other 8 members from our club including our ZC Ln AR.Nallamuthu attended the function. ZC called the meeting to order. Lions Club of Vickramasingapuram President welcomed the gathering. Our Secretary Ln Dr.C.M.Murthy MJF explained and detailed about the services so far rendered. All Secretaries and Presidents explained about the club activities in detail. 50 Kg Rice was donated to Annai Seva Asramam by ZC Ln AR.Nallamuthu and he gave mementos to all PSTs and members. All the 4 Clubs in our Zone attended the function.






வட்டாரத் தலைவர் நல்லமுத்து சங்கங்களின் 
செயல்பாடுகள் குறித்து பாராட்டிப் பேசினார். 



ரூபாய் 1500 மதிப்பிற்கு 50 கிலோ அரிசி இலவசமாக 
வட்டாரத் தலைவரால்  வழங்கப்பட்டது.

No comments: